உக்ரைனின் புச்சா நகரத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மேற்பார்வையிட்டு ரஷ்ய வீரர்களை ஜனாதிபதி விளாடிமிர் புடின் கவுரவித்த செய்தியை, தொலைக்காட்சி நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர் கண்கலங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
புச்சா படுகொலையை மேற்பார்வையிட்ட ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவுரவித்த செய்தியை ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரடியாக ஒளிபரப்பினார்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் யுமிகோ மாட்சுவோ என அடையாளம் காணப்பட்ட அந்த செய்தி வாசிப்பாளர், செய்தி குறித்த தனது விரக்தியை நேரலையில் வெளிப்படுத்தினார்.
உக்ரேனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருப்புகளுக்கு “a role model” என்ற கவுரவத்தை வழங்கினார் என்று ஒரு வரியை அவர் படித்தபோது மாட்சுவோ உணர்ச்சிவசப்பட்டார்.
Reddit-ல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், உணர்ச்சிவசத்தில் அவர் கண்கலங்கியபோது சிறிது நேரம் இடைநிறுத்தப்படுவதைக் காணலாம்.
“இன்னும் ஏராளமான பொதுமக்கள் பதுங்கு குழிக்குள் சிக்கியுள்ளனர்” என்று படித்துக் கொண்டிருக்கபோது, “மன்னிக்கவும், என்னை மன்னிக்கவும்..” என்று கூறினார். பிறகு ஆழ்ந்த மூச்சை எடுத்த பிறகு, அவர் மீண்டும் செய்தியை தொடர்ந்தார்.
இந்த வார தொடக்கத்தில், புட்டின் 64வது தனி காவலர் மோட்டார் ரைபிள் படையணிக்கு “Guards” என்ற கெளரவப் பட்டத்தை வழங்கினார். கையொப்பமிடப்பட்ட கடிதத்தில், புடின் “ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக” பிரிவுக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் “பெரிய வீரம் மற்றும் தைரியத்துடன்” அந்த பிரிவு செயல்பட்டதாகக் கூறினார்.
ரஷ்ய படையெடுப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் புச்சாவும் (Bucha) ஒன்று. ரஷ்ய துருப்புக்கள் ஒரு புதிய தாக்குதலுக்காக அங்கிருந்து வெளியேறிய பிறகு, அங்கு உக்ரேனிய அப்பாவி மக்கள் எல்லா தெருக்களிலும் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டது தெரியவந்தது. பெண்கள், சிறுமிகள் என பலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.