சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு காதல் ஜோடிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளம்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் இவர்களின் சீண்டல்களை கண்டு முகம் சுளிக்கின்றனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் அமர்ந்து கொண்டு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி பயணித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் காதலர்கள் இந்த ஜாலி ரைடு சென்றுள்ளனர். பின்பக்க சீட்டில் அமர வேண்டிய காதலி, பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது எதிர்ரெதிர் திசையில் அமர்ந்து காதலனை இறுக்கி அனைத்து, ‘லிப் டூ லிப்’ முத்தம் கொடுத்தபடி பயணித்தார். எதிரில், வேகமாக வந்த லாரி, பஸ்சை பற்றி கூட இவர்கள் கவலைப்படவில்லை. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த வழியில் சென்ற பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.