சென்னை: பொள்ளாச்சியில் 1 அரசு உதவி பெறும், 2 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். மொத்தம் உள்ள 1,640 இடங்களில், 674 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். வரும் காலங்களில் தேவை ஏற்பட்டால், பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என கூறினார். பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கேட்டிருந்தார்.
