மதுரையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி பழுது நீக்கும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்தனர்.
மதுரை மாநகராட்சி 70வது வார்டு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுதாகி கழிவு நீர் தேக்கமடைந்துள்ளது. இதனை அடுத்து மின் மோட்டாரை வெளியே எடுத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் மின் ஊழியர்கள் கார்த்திக், சரவணன் மற்றும் தொழிலாளர்கள் லட்சுமணன், சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் முதலில் இறங்கிய சரவணன் விஷவாயு தாக்கியதால் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் குதித்த போது அவர்களும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.