வால்பாறை அருகே ஒற்றை யானை விரட்டியதால் மாரடைப்பு ஏற்பட்டு வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை பகுதியில், வால்பாறை வனச் சரகம் மற்றும் மானாம்பள்ளி வனச் சரகம் உள்ளது. இதில், மானாம்பள்ளி வன பகுதியில் உள்ள மந்திரி மட்டம் என்ற இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் 4 பேர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது வனப் பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை வேட்டை தடுப்பு காவலர்களை விரட்டியுள்ளது.
இதில், யானைக்கு பயந்து 4 பேரும் வனப் பகுதியில் ஓடினர், இதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பின் யானையை வனத்திற்குள் விரட்டினர், இதில், ரவிச்சந்திரன் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்,
யானை விரட்டியதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை அடுத்து அவரது உடல பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது,Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM