டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா எல்க்ஸி பங்கு விலையானது கடந்த 3 ஆண்டுகளில் 725% ஏற்றம் கண்டுள்ளது.
இப்பங்கின் விலையானது கடந்த ஏப்ரல் 18, 2019 நிலவரப்படி 956 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி 7889 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இப்பங்கினில் மூன்று வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால் இன்று அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய்க்கு மேல்.
டாடா திடீர் முடிவு.. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றம்.. என்ன காரணம்..?!
டெக்னிக்கல் நிலவரம் என்ன?
இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 47.92 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 4.9% அதிகரித்து உச்சமானது 8190.95 ரூபாயாக தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பங்கின் விலையானது 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜீக்கும் மேலாக காணப்படுகின்றது. எனினும் 5 நாள் மற்றும் 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்
இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையானது 10,000 ரூபாயினை எட்டலாம் என நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர். இதே மீடியம் டெர்மில் ஓவர் பாட் லெவலில் உள்ளது. ஆக அதற்கேற்ப முதலீட்டாளர்கள் திட்டமிடுவது நல்லது.
ஓராண்டு நிலவரம் என்ன?
டாடா குழுமத்தின் இப்பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 163.18% அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 34.47% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் சந்தை மூலதனம் 49,284 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய் எதிர்பார்ப்பு
வரவிருக்கும் காலாண்டுகளில் இந்த நிறுவனம் வலுவான வருவாய் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த மூன்று தினங்களாக சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 7600 ரூபாய் என்றும், அதனை உடைத்துக் காட்டினால் 7200 ரூபாய் வரையில் கூட செல்லலாம். இதே 8120 என்ற லெவலுக்கு மேலாக உடைத்துக் காட்டினால் 9200 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு
இப்பங்கினில் டிசம்பர் காலாண்டில் இப்பங்கினில் 11.93% பங்குகள் அன்னிய முதலீட்டாளார்கள் வசம் இருந்த நிலையில், மார்ச் மாலாண்டில் 13.15% ஆக அதிகரித்துள்ளது. இதே போல 278 ஆக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 336 ஆக அதிகரித்துள்ளது. இதே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் 3.60%ல் இருந்து, 3.16% ஆக பங்கு விகிதத்தினை குறைத்துள்ளனர். இதே நிறுவன முதலீட்டாளர்காள் 17.47%ல் இருந்து, 18.09% ஆக அதிகரித்துள்ளனர்.
This Tata group stock turned huge profit in 3 years, do you have it?
This Tata group stock turned huge profit in 3 years, do you have it?/ரூ.1 லட்சம் டூ ரூ.3 லட்சம்.. ஷார்ட் டெர்மில் டாடா குழும பங்கு கொடுத்த செம சான்ஸ்..!