வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாமில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் மே 8 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.