ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற கார் விபத்துக்குள்ளானது. பலோட் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு காரில் ஊர் திரும்பியபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
இதில் சுபாஷ் கோச்சார், அவரது மனைவி மற்றும் 3 மகள்கள் என காரில் இருந்த 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த சுபாஷ் கோச்சார், கைராகர் மாவட்டம் கோல்பசாரைச் சேர்ந்த தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரின் கதவுகள் தானாக மூடிக்கொண்டு திறக்க முடியாததால் உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.