லண்டன் அன்பழகன் மனைவி மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த இரங்கல் செய்தியில், “மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பாலூரான்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவரும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான லண்டன் அன்பழகனின் மனைவி கவிதா இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
லண்டன் அன்பழகனின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் காரணமாக இருந்தவர் அவரது மனைவி கவிதா. அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.
அவரை இழந்து வாடும் கணவர் லண்டன் அன்பழகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.