பொதுவான முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது யூலிப் திட்டம் பற்றித் தான்.
யூலிப் என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டமாகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டு ஆப்சனுடன் கூடிய, ஒரு காப்பீட்டு பாலிசி. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் இன்சூரன்ஸ் + முதலீடு என்ற இரண்டும் சேர்ந்த ஒரு திட்டமாகும்.
600 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! 3% சரிவில் டாக்டர் ரெட்டி பங்குகள்..!
இதுவும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்று தான் செயல்படும். இதிலும் குறிப்பிட்ட விகிதத்தில் பணம் செலுத்தலாம். இது உங்களின் தேவை மற்றும் ரிஸ்க் விகிதத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
யூலிப் விதிமுறைகள்
எனினும் யூலிப் திட்டங்களை பொறுத்தவரையில் லாக் இன் பீரியர்டு 5 ஆண்டுகளாகும். யூலிப்-பில் பொதுவாக முன் கூட்டியே பணத்தை பெற நினைத்தால் இன்சூரன்ஸ் திட்டத்தினை இழக்க நேரிடலாம். ஆக இந்த திட்டத்தினை எடுக்கும்போது இதனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இது திட்டங்களுக்கு திட்டம் மாறுபடும்.
யுடிஐ – யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம்
இன்று நாம் பார்க்கவிருப்பது யுடிஐ – யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் (Direct plan). இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் ஒரே திட்டத்தில் வழங்குகிறது. இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது காப்பீடு செய்யப்பட்டவர்கள் எதிர்பாராத தருணங்களில் இறந்து விட்டால் ஏற்படும் நிதி சார்ந்த இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. அதே நேரம் சேமிப்பினையும் வலுப்படுத்துகிறது. மொத்தத்தில் 2இன் 1 ஆக செயல்படுகிறது.
AUM – NAV
இந்த யுடிஐ – யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் அக்டோபர் 01, 1971ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மொத்த AUM விகிதமானது, 5299.27 கோடி ரூபாயாகும். இதன் நிகர சொத்து மதிப்பு (NAV) 34.1236 ரூபாயாகும். இது 0.88% செலவின விகிதத்தினை கொண்டுள்ளது. இது அதன் சராசரி செலவினத்தினை போலவே உள்ளது.
முதலீட்டு ஆப்சன்
இந்த யூலிப் திட்டத்தில் 40%-க்கு மேல் பங்கு மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களில் முதலீடு செய்ய திட்டமிடுகிறது. மீதமுள்ள தொகை கடன் சந்தை அல்லது ரிஸ்க் சற்று குறைவான நிதி சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் சந்தையுடன் இணைந்து முதலீடு செய்யப்படுவதால் லாப விகிதமும் அதிகம் கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீட்டு தொகை
இது சற்று ரிஸ்கான திட்டமாகும். யூலிப்புக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை 15,000 தேவைப்படுகிறது. இதே எஸ்ஐபி-யில் குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தில் லாக் இன் காலம் மற்றும் வெளியேறும் காலம் இல்லை.
வருமான விகிதம் –
SIP -யில் வருமானம்
1 வருடம் – 2.35%
2 வருடம் – 13.62%
3 வருடம் – 20.25%
5 வருடம் – 26.40%
Lum sum investment0-ல் வருமானம்
1 வருடம் – 11.47%
2 வருடம் – 43.90%
3 வருடம் – 27.59%
5 வருடம் – 48.47%
தொடங்கியதில் இருந்து – 130.43%
போர்ட்போலியோ
பங்குகளில் 38.29%
கடன் சந்தையில் – 60%
அரசு பத்திரங்களில் – 28.27%
குறைந்த ரிஸ்க் உடைய செக்யூரிட்டீகள் – 30.65%
அதேபோல நிதித்துறை, டெக்னாலஜி, மூலதன துறை உள்ளிட்ட பல துறைகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகின்றது.
இந்த ஃபண்டினை அதீஆளவில் GOI, குஜராத் அரசு, ஹெச். டி.எஃப்.சி லிமிடெட், கனரா வங்கி, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகள் அதிகளவில் வைத்துள்ளனர்.
This ULIP has given 26 percent SIP returns in 5 years
This ULIP has given 26 percent SIP returns in 5 years/ 2 இன் 1 திட்டம்.. யூலிப் திட்டத்தில் SIP வருமானம் 26%.+ இன்சூரன்ஸ்.. யோசிக்க வேண்டிய திட்டம் தான்!