சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு ஏதுமின்றி 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 34,53,447 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று எந்தவொரு கொரோனா தொற்றும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதமாக கொரோனா உயிரிழப்பு ஏற்படாத நிலை தொடர்கிறது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.
இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,136 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 286 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
இன்று மட்டும் 18,006 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6,60,18,119 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona22-04-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona22-04-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona22-04-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona22-04-04.jpg) 0 0 no-repeat;
}