வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆல்வார் : ராஜஸ்தானில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவிலை, ஆக்கிரமிப்பு என காங்., அரசு இடித்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆல்வாரில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவில், ‘புல்டோசர்’ உதவியுடன் இடிக்கப்படும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இக்கோவிலை இடித்ததாக கூறி, ராஜ்கர் லக் ஷ்மண்கர் தொகுதி காங்., – எம்.எல்.ஏ., ஜோஹ்ரி லால் மீனா உட்பட மூன்று பேர் மீது, கோவில் பூஜாரி புகார் கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா நேற்று கூறுகையில், ”வளர்ச்சி பணி என கூறி, 300 ஆண்டு பழமையான சிவன் கோவிலை காங்., அரசு இடித்துஉள்ளது. ”இதன் வாயிலாக, மக்களை கண்ணீர் சிந்த வைப்பதும், ஹிந்து மதத்தை புண்படுத்துவதுமே அவர்களின் மதச்சார்பின்மை கொள்கையாக தெரிகிறது,” என்றார்.
இதை மறுத்துள்ள ஜோஹ்ரி லால் மீனா, ”ராஜ்கர் நகராட்சி தலைவர் பா.ஜ.,வை சேர்ந்தவர். அவரும், அவருடைய கவுன்சிலர்களும் தான் ஆக்கிரமிப்பு என கோவில்களை இடித்துள்ளனர்,” என்றார்.
Advertisement