அரசாங்கத்திலிருந்து வெளியேறி ,தனியான குழுவாக செயற்படுகின்ற 41 பேர் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவுகள் இன்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன.
தனக்கு கிடைத்துள்ள அனைத்து அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தின் அம்சங்களை நீக்கிவிட்டு 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஜனநாயக அம்சங்களை மீண்டும் அரசியலமைப்பில் இணைத்து அதிகாரத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் 21ஆவது திருத்தச் சட்டம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ இது தொடர்பாக தெரிவிக்கையில், 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி 19 ஆவது திருத்தத்தில் இருந்த ஜனநாயக நடைமுறைகளை புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கி, 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை வலுவிழக்க செய்வதே நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக செயல்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆரம்பத்தில் விஜயதாஸ ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று சர்ச்சைக்குரிய வாதங்கள் இடம்பெற்றன.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு அரசாங்கம் உள்ளடக்கிய திட்டத்தை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரினார்.
சபையில் இடம்பெற்ற கடுமையான விவாதங்களைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தீர்மானித்தார்.