ராதே ஷியாம் படம் தோல்விக்கு பிரபாஸ் விளக்கம்
ராதே ஷியாம் தோல்வி குறித்து முதல் தடவையாக பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராதே ஷியாம் தோல்வி குறித்து முதல் தடவையாக பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ராதே ஷியாம் சரியாக போகாததற்கு கொரோனா பரவல் காரணமாக இருக்கலாம் அல்லது திரைக்கதையில் ஏதேனும் குறை இருந்து இருக்கலாம். மக்கள் என்னை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன் என்றார்.
காஷ்மீர் பெண் கதாபாத்திரத்தில் சமந்தா?
நடிகை சமந்தா தனது அடுத்த படத்தில் காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணாக நடிக்க இருக்கிறார்.
நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடி வருகிறார். அப்போது ஒரு ரசிகர் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு ரகசியம் ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
“நான் எனது கனவுகளை நனவாக்கிகொள்ள வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அடுத்து விஜய் தேவரகொண்டா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு காஷ்மீர் எல்லையில் நடக்க உள்ளது’’ என்றார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராகும் பிரபலம்
கணவர் தனுஷை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். சமீபத்தில் பயணி என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார். அடுத்து இந்தியில் ‘ஒ சாதி சல்’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
மீண்டும் படம் இயக்குவது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “வை ராஜா வை’’ படம் ரிலீஸ் ஆனதும் எனக்கு தமிழ், இந்தி பட உலகில் இருந்து படம் இயக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனது குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததாலும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்ததாலும் படம் இயக்க முடியவில்லை.
7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் டைரக்டு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்க ஆர்வம் உள்ளது’’ என்றார்.
விக்ரம் படத்தின் லிரிக் வீடியோ
விக்ரம் பல மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
கிராமத்து கேப்ரில்லா To சன் டி.வி சுந்தரி: இந்த எமோஷனல் ஸ்டோரியை கவனிச்சீங்களா?
இந்தப் படத்தின் லிரிக் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
அதீரா எனத் தொடங்கும் இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். வகு மசான் பாடியிருக்கிறார்.