தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடுநிலைப்பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட உள்ளதால், அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.