திருவள்ளூரில் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் ஒன்று மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியதுடன் மின் பணியாளரின் மண்டையை உடைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மணவாளநகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் இளநிலை பெண் பொறியாளர் உட்பட 3 பேர் பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஏன் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது? என கேட்டு தகராறில் ஈடுபட்டத்துடன், மேசை மீது இருந்த கம்பியூட்டர் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
அவர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட மின் ஊழியர் குப்பனின் தலையில் மின் மீட்டரால் தாக்கியதில் அவரது தலையில் வெட்டு காயம் விழுந்தது. அவரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடிய நிலையில், அந்த கும்பலின் முக்கிய குற்றவாளி பாலாஜி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.