அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை நிலைநிறுத்தும் ரஷ்யா


அமெரிக்காவிற்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை புதிதாக சோதனை செய்த ரஷ்யா, அவரும் ஆக்டொபரில் தளத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் Roscosmos விண்வெளி ஏஜென்சியின் தலைவரான Dmitry Rogozin இதனை கூறியுள்ளார்.

ரஷ்யா புதன்கிழமையன்று அதன் ‘சர்மட்’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (RS-28 Sarmat ICBM) வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

சர்மட் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் (Nuclear Warheads) மற்றும் வெடிகொண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை எளிதில் தாக்கும் திறன் கொண்டது.

நிதி மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு வெற்றிக்கரமாக நடத்தப்பட்ட இந்த சோதனை, ரஷ்யாவின் வலிமையைக் குறிக்கிறது.

சர்மட் நிலைநிறுத்தம்

இந்த நிலையில், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள சைபீரியாவின் க்ராஸ்நோயார்ஸ்க் (Krasnoyarsk ) பகுதியில் இந்த ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் Rogozin கூறியுள்ளார்.

சோவியத் காலத்து வோயோவோடா ஏவுகணைகளை மாற்றும் அதே தளங்களிலும் அதே குழிகளிலும் அவை வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

“சூப்பர்-வெப்பன்” என்று குறிப்பிடக்கூடிய இந்த ஏவுகணையின் வெளியீடு ஒரு வரலாற்று நிகழ்வாகும், இது அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று ரோகோசின் மேலும் கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.