இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதிய குழு நிறைவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.