வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு,-பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, கூடுதலாக 3,800 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா சம்மதித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.
இதனால், அங்கு விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், இலங்கைக்கு கடனுதவி, உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் அளித்து இந்தியா உதவி வருகிறது. அதேபோல், இந்தியாவுக்கு இலங்கை திருப்பித் தர வேண்டிய ௩,௦௦௦ கோடி ரூபாய்க்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நிதியமைச்சர் அலி ஜாப்ரி, கடனுதவி கேட்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு, சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அலி ஜாப்ரி கூறியதாவது:நிதி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு குறைந்தது ௩௦ ஆயிரம் கோடி ரூபாய் தேவை.கடனுதவி கேட்டு சர்வதேச நிதியம், உலக வங்கி, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் பேசி வருகிறோம்.
இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது. தற்போது எரிப் பொருட்கள் இறக்குமதி செய்ய, மேலும் ௩,௮௨௪ கோடி ரூபாய் கடன் வழங்கவும் சம்மதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement