கனடாவில் மாயமாகியுள்ள ஐந்து வயது சிறுவன்… நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சோகம்


கனடாவில், Red Earth Cree Nation என்ற பூர்வக்குடியின பகுதியைச் சேர்ந்த Frank Young என்ற ஐந்து வயது சிறுவன் செவ்வாயன்று மாயமானான்.

Carrot River என்னும் நதியின் அருகில் தன் வீட்டின் முன் அமைந்துள்ள புல்வெளியில் விளையாடிருந்த அவன் காணாமல் போயுள்ளான்.

Saskatchewan மற்றும் மனித்தோபாவிலுள்ள மக்கள் உட்பட ஒன்பது தன்னார்வலர்கள் குழுக்கள் Frankஐத் தேடி வருகிறார்கள்.

ஆனால், Frank காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவனைக் கண்டுபிடிக்க கூடுதல் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Frank காணாமல் போனதைத் தொடர்ந்து கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கும் அவனது பெற்றோருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

கனேடிய பொலிசாரான Sgt. Richard Tonge கூறும்போது, ஆகாய மார்க்கமாகவும், தண்ணீர் மற்றும் நில மார்க்கமாகவும் Frankஐத் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையிலும், அவனையோ, அவனது உடைமைகள் எதையும் கூடவோ கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், Frank கடத்தப்பட்டதற்கான அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ள நிலையில், Frankஐத் தேடும் பணி தொடர்கிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.