கனாடாவில் இளம் பெண் உட்பட 7 பேர்கள் மீது கொலை வழக்கு: வெளிவரும் பின்னணி



கனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 இளைஞர்கள் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 7 பேர் கொண்ட கும்பலால் 16 வயது மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
கத்தியால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட Karanveer Sahota என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.
புதன்கிழமை வெளியான உடற்கூராய்வு அறிக்கையில், மார்பில் குத்தப்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், எட்மண்டன் பொலிசார், 17 வயது பெண், இரண்டு 16 வயது ஆண்கள், இரண்டு 15 வயது ஆண்கள் மற்றும் இரண்டு 14 வயது ஆண்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய கும்பல் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது மாணவர் Karanveer Sahota மரணமடைந்த நிலையில், கொலை வழக்காகவே பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த மாணவர் Karanveer Sahota மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலும் நன்கு அறிமுகமானவர்கள் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.