காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் தக்களூரில் உள்ள புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தக்களூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பான வகையில் ஆண்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று இரவு (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் சிலுவைக் கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக திருப்பலி நடத்தப்பட்டது. இதில் திரளான அளவில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாள் தோறும் மாலை சிறிய தேர் பவனி நடைபெறவுள்ளது. மேலும் 29 ஆம் தேதி 3 தேர் பவனி, 30 ஆம் தேதி மின் விளக்குகள் அலங்காரத்துடன் 5 தேர் பவனி நடைபெற இருக்கிறது. விழா நிறைவாக மே 1 ஆம் தேதி காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்படும்.