வேப்பூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியையடுத்த சிறு நெசலூர் கிராமத்தில் இருந்து பில்லூர் கிராமத்துக்கு செல்லும் சாலையின் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் தரைகிணறு உள்ளது. அந்த கிணற்றில் 32 வயது மதிக்கத்தக்க சுஜாதா என்பவரின் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. தகவலறிந்து அந்த இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் சுஜாதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்கொண்டு சுஜாதாவின் கணவரான வெங்கடேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் முதற்கட்டத்தில் வெங்கடேசனுக்கும் சுஜாதாவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் வந்த சண்டையில், அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிந்துள்ளது. சில தினங்களுக்குப் பின் சமாதானமாகி மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவரிடம் யாருக்கும் தொடர்பில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாய் மற்றும் சகோதரி ஆகியோர் சுஜாதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்துள்ளது. இதையடுத்து அவர்களின் தாய் நேரடியாக மகனின் வீட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் `எனது மகள் எங்கே?’ என்று கேட்டதாகவும், வீட்டிலிருந்த சுஜாதாவின் கணவன் வெங்கடேசன் `எனக்கு தெரியாது’ என்றும் கூறியதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு வேப்பூர் காவல் நிலையம் சென்ற வெங்கடேசன் தனது மனைவியை காணவில்லை என தெரிவித்துள்ளார் நிலையில் இன்று காலை சுஜாதாவின் உடல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்துள்ளது. இதனால் இவர்களின் தாய் நம் பேசும் தான் தனது மகளை அடித்துக் கொன்றதாக தெரிவித்ததையடுத்து. போலீசார் வெங்கடேசனிடம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்தி: உயர் கல்விக்காக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது: யுஜிசிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM