Crispy dosa batter tips in tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக தோசை உள்ளது. இவை உலகெங்கிலும் உள்ள உணவு ஆர்வலர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. பொதுவாக பருப்பு மற்றும் அரிசி கலவையுடன் தயாரிக்கப்படும் இந்த தோசைகளுக்கு தேங்காய் சட்னி, சாம்பார் தான் ஏற்ற சைடிஷ்.
வீட்டில் தோசை சாப்பிட விரும்பும் மக்கள் அவை கிரிஸ்பியாகவும், பேப்பர் ரோஸ்ட் போன்றும் இருக்க நினைப்பதுண்டு. அப்படியான தோசைகளுக்கு சில சிம்பிள் டிப்ஸ்கள் முக்கியம். அதில் முக்கிய பகுதி தான் மாவு அரைப்பது. இந்த தோசை மாவு அரைக்க நம்மில் பலர் சிரமப்படுகிறோம். இதனால், கடைகளில் அரைத்து விற்கப்படும் மாவுகளை நோக்கி நகர்கிறோம்.
ஆனால், நம்முடைய வீட்டிலே தயார் செய்யப்படும் மாவும் மிகவும் ஆரோக்கியமானதாகும். சரியான அளவுகளில் அரைத்து வைத்துக்கொண்டால் பல நாட்களுக்கு அவற்றை பயன்படுத்தி வரலாம். அப்படி தயார் செய்ய நமக்கு சில நுணுக்கங்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் சில ஈஸியான டிப்ஸ்களை உணவு நிபுணர் உமா ரகுராமன் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதை நாங்கள் இங்கு உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
“உத்தபம், பணியாரம் அல்லது இட்லி செய்ய நீங்கள் அதே மாவை பயன்படுத்தலாம்” என்று உமா ரகுராமன் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உணவு நிபுணர் உமா ரகுராமனின் சில குறிப்புகள், பின்வருமாறு:
ஸ்டேப் 1 – முறையாக கழுவுதல்:
கீழே குறிப்பிட்டுள்ளபடி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு இரண்டையும் பலமுறை கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
ஒரு பாத்திரத்தை எடுத்து ஒன்றாகக் கழுவவும்:
-2.5 கப் இட்லி அரிசி/ புழுங்கல் அரிசி
1/2 கப் பச்சை அரிசி
மற்றொரு பாத்திரத்தில், ஒன்றாகக் கழுவவும்:
– 1/2 கப் உளுத்தம் பருப்பு
1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
ஸ்டேப் 2– (அ) சரியாக ஊறவைத்தல்
– கழுவிய அரிசி கலவையை 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்
– வெந்தயத்துடன் கழுவிய பருப்பை 1.5 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்
– முக்கிய குறிப்பு: நீங்கள் அரிசி மற்றும் பருப்புகளை ஊறவைக்கும் போது, நீங்கள் அவற்றை தண்ணீரில் தெளிவாக பார்க்க முடியும்.
அவற்றை ஒரே இரவில் அல்லது குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
(ஆ) – சரியாக அரைத்தல்
– அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக அரைக்கவும். ஊறவைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி அவற்றை அரைக்கவும்.
– குறிப்பு: உமா ரகுராமன் மாவை அரைக்க 2.5 கப் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளார். (இதில் ஊறவைத்த தண்ணீரும் அடங்கும்). இது அரிசியின் தரத்தைப் பொறுத்து சிறிது மாறுபடும்.
ஸ்டேப் 3 – சரியாக கலக்கவும்
அரைத்த உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும்.
கல் உப்பு (அல்லது வழக்கமான உப்பு) – 1.5 தேக்கரண்டி (தேவைப்பட்டால் நீங்கள் பின்னர் சரிசெய்யலாம்) மற்றும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும். (உமா கூறியது போல் நல்லெண்ணெய் சேர்க்க விருப்பமானது தோசையின் சுவையை அதிகரிக்கும்)
குறைந்தது 3-4 நிமிடங்களுக்கு உங்கள் கையால் மாவை கலக்கவும்.
– நன்றாகக் கலந்ததும், மூடி 6-8 மணி நேரம் தனியாக வைக்கவும். குளிர்ந்த காலநிலையில் இது அதிக நேரம் எடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“