ஈராக்கின் மிகவும் பிரபலமான பெண் கலைஞரான நஜிஹா சலிமை டூடுல் மூலம் கூகுள் இன்று நினைவு கூர்ந்துள்ளது. நாஜியா சலீம் பற்றி தெரியுமா? அவருடைய வாழ்க்கையின் முழு கதையையும் தெரிந்துக் கொள்ளுங்கள்..
நாஜியா சலீம் (Naziha Salim) ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேராசிரியராக இருந்தார். ஈராக்கியப் பெண்களின் வாழ்க்கையைத் தன் கைகளால் பல அழகான படங்கள் மூலம் மிகச் சிறப்பாகச் சித்தரித்தவர் நஜீமா.
உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான தேடுபொறியான கூகுள் இன்று டூடுல் மூலம் இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்தப் படத்தில், ஒருபுறம், நாஜியா சலீம் கையில் ஓவியம் வரைந்த தூரிகையை பிடித்தபடி இருக்கிறார். ஓவியத்தின் மற்றொரு பகுதியில், நாஜியா சலீமின் நிஜப் படம் காட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படங்களுக்குப் பக்கத்தில் சில ஓவியங்கள் தெரியும். 2020 ஆம் ஆண்டில், இந்த நாளில் அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி, நாஜியா சலீமின் கலைப்படைப்பு, பார்ஜீல் ஆர்ட் ஃபவுண்டேஷன் (Barjeel Art Foundation) என்ற அமைப்பின் மூலம் வித்தியாசமான மற்றும் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றது.
மேலும் படிக்க | நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்
யார் நாஜியா சலீம்?
நாஜியா சலீம் 1927 இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் பிறந்தார். நாஜியாவின் முழு குடும்பமும் கலைத் துறையில் பிரபலமானவர்கள். நாஜியாவின் தந்தை மிகவும் பிரபலமான ஓவியராக இருந்தார்,
நஜீமாவின் தாயார் எம்பிராய்டரி கலையில் நிபுணர். நாஜியா சலீமுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர், அவர்கள் மூவரும் கலைத் துறையில் பணியாற்றியவர்கள்.
நாசியா சலீமின் ஒரு சகோதரர் ஈராக்கின் மிகவும் பிரபலமான சிற்பிகளில் ஒருவராகக் கருதப்பட்டார், மற்றொரு சகோதரர் தனது கலையை வடிவமைப்பாகக் காட்டியவர். நாஜியாவின் மூன்றாவது சகோதரர், அரசியல் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றி வந்தார்.
மூன்று சகோதரர்கள், பெற்றோர்கள் மற்றும் நாஜியா (என இவரது முழு குடும்பமும் ஈராக்கில் பிரபலமான கலைஞர்களின் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! மனித ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக்!
கலைக்கு அங்கீகாரம்
நாஜியா மிக இளம் வயதிலேயே கலையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அவரது வளர்ச்சியும், அவளது படைப்புகளின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் தொடங்கின.
பாக்தாத் ஃபைன் ஆர்ட்ஸில் (Baghdad College of Fine Arts (now the Institute of Fine Arts)) கலைத் துறையில் பட்டம் பெற்றார். பாரிஸில் சுவரோவியம் (fresco and mural painting) வரைவதில் நாஜியா மிகவும் திறமையானவராகக் கருதப்பட்டார்.
கலைகளில் அவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரது தொடர்ச்சியான கடின உழைப்பு ஆகியவை நாஜியாவை பாரிஸில் உள்ள கோல் நேஷனல் சுபீரியர் டெஸ் பியூக்ஸ்-ஆர்ட்ஸில் மேற்படிப்பைத் தொடர வழிவகுத்தது.
அங்கு உதவித்தொகை பெற்ற முதல் பெண் நாஜியா என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்த நாஜியா, தன் வாழ்நாள் முழுவதும் ஈராக்கிய பெண்களின் வாழ்க்கையை தன் கலைப்படைப்பின் மூலம் உலகிற்கு காட்டியவர்.
இன்றும் உலகம் முழுவதும் நினைவுகூரப்படும் பெண் ஓவியர் நாஜியா சலீம். அவரது சிறப்பு நாளை டூடுல்கள் மூலம் கொண்டாடுகிறது.
மேலும் படிக்க | ஜவ்வரிசியால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: கண்டிப்பா அடிக்கடி சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR