கொழும்பு:
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்த நிலையில், நாணய மதிப்பிழப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் கோத்தபய அரசு திணறி வருகிறது.
நிதி நெருக்கடி, உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் விலை கடும் உயர்வு மற்றும் மின்வெட்டு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க குறைந்தபட்சம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் உலக வங்கி போன்ற சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை நிதி மந்திரி அலி சப்ரி திட்டமிட்டுள்ளார்.
மேலும் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுடனும் நிதி உதவிக்கான பேச்சு வார்த்தைகளையும் அவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இலங்கை எரிபொருள் தேவையை சமாளிக்கும் வகையில் எண்ணெய் இறக்குமதிக்காக கூடுதலாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்
( ரூ.3,800 கோடி ) கடன் உதவியை வழங்க இந்தியா சம்மதம் தெரிவித்து உள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் 1 பில்லியன் டாலர்களை கடன் உதவியாக வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
அமெரிக்கா, ரஷியாவுடனான இந்திய உறவு எத்தகையது?- மத்திய நிதி மந்திரி விளக்கம்