கையில் மைக்ரோ சிப்! வியக்கவைக்கும் புதிய பேமென்ட் தொழில்நுட்பம்!

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சந்தையை அடையும் போது, டெக் பொருள்களின் அளவுகளும் சிறிதாகிக் கொண்டே போகிறது. பயனர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இதன் வடிவமைப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மைக்ரோ சிப்புகள். நெல்மணி அளவிலேயே இந்த மைக்ரோ சிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே பெரிதாக பயன்படுத்தப்பட்ட வந்த இத்தொழில்நுட்பம், தற்போது அனைத்து துறைகளிலும் காலூன்றத் தொடங்கி உள்ளது. கிரெடிட் கார்டுகள் முதல் கார் சாவி வரை அனைத்துக்குமே உதவும் வகையில் மைக்ரோ சிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது உங்களுக்கு பகல் கனவாகத் தோன்றினாலும், அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் ஒருவர் கையில் சிப் பொருத்தி காபி கடையில் பணம் செலுத்தியுள்ளது தான் இப்போது ஹாட் டிரெண்டாகப் பேசப்பட்டு வருகிறது. ஆம், நீங்கள் பயன்படுத்தும் டெபில் அல்லது கிரெடிட் கார்டுகளில் இருக்கும் சிப்களை மைக்ரோ சிப்களாக மாற்றி உடலில் செலுத்திக் கொள்ள முடியுமாம்.

கூகுள் போட்ட தடை! இனி Android போன்களில் இதை செய்ய முடியாது!

கைகளால் பேமெண்ட் செய்யலாம்

கடை வீதிகளுக்குச் செல்லும்போது, போன் தொலைந்து விடும் என்றோ, கார்டு தொலைந்து விடும் என்றோ பயப்பட வேண்டாம் என்கிறார் காபிக்கு கையை அசைத்து பணம் செலுத்தி அந்த 37 வயது நபர். ஒரு கிராமிற்கும் குறைவான எடையில் மைக்ரோ சிப்புகள் தயாரிக்கப்படுவதால், தோலுக்கு அடியில் எளிதாக இதை உட்செலுத்த முடிகிறது.

ஆனால், சிப் செலுத்திய இடத்தில் யாராவது வந்து கிள்ளினால் அதிக வலியை ஏற்படுகிறது என்றும் தனது கவலையைப் பகிர்ந்துள்ளார் பெளமென். ஆனால், கைகளை அசைத்து பணத்தை செலுத்துவது ஒரு வித புதுமையான அனுபவம் என்று அவர் பூரிக்கிறார்.

Google Maps உதவியுடன் ரயிலின் Live Status-ஐ தெரிந்து கொள்ளலாம்!

தகவல் திருட்டு

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் தனிமனிதர்களின் தகவல்களைத் திருடுதல் என்பது கடுயான கண்டனத்துக்குரிய குற்றம் என்ற ரீதியில் உலகளவில் உள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஒரு மனிதனின் உடலில் உள்ள அனைத்து நகர்வுகளையும் அறிந்து கொள்ளும் இதுபோன்ற மைக்ரோ சிப்புகளால், தனியுரிமை சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று சாமானிய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

மறுபுறம், உலக நாடுகளில் சில அரசுகள், மக்களின் முழு தகவலும் அடங்கிய மைக்ரோ சிப்புகளை உடலுக்குள் செலுத்துவதன் மூலம், வேலைகள் இன்னும் சுலபமாகும் என்று கருத்துகளை பகிர்ந்து வருகிறது. 2015ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற மைக்ரோ சிப்புகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, பெருவாரியான மக்கள் அதற்கு எதிராகப் போராடினர்.

ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!

முன்னணியில் ஸ்வீடன்

ஸ்வீடனில் தான் அதிகளவு மக்கள் இந்த மைக்ரோ சிப்புகளை கைகளுக்குள் பொருத்திக் கொண்டுள்ளனர். கதவைத் திறப்பது முதல் பணம் செலுத்துவது வரையிலான அனைத்து வேலைகளையும், கைகளை ஒருமுறை அசைத்தே முடித்து விடுகின்றனர். என்ன தான் பல மக்கள் இதனை கெளரவமாக நினைத்தாலும், பெரும்பாலான மக்கள் இதனை எதிர்கின்றனர்.

மைக்ரோ சிப்களை இம்ப்ளாண்ட் முறையில் கைகளில் பொருத்திக் கொள்வது நாளடைவில் தொற்று நோய்களை உருவாக்கி மனித உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே பாதிப்படையச் செய்யும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

புதிய தொழில்நுட்பம்
எழுச்சி காணும் சமயத்தில், பல கட்ட எதிர்ப்புகள் வந்து மறைவதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். ஏனென்றால், கடுமையாக எதிர்க்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள், இன்று மக்களின் அத்தியாவசிய செயல்பாடுகளில் ஒன்றாக மாறி அவர்கள் வாழ்வுடன் கலந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது.

புதிய தொழில்நுட்பம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.