மைசூரு : ”மாநிலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் கூட்டம், நிகழ்ச்சிகள் உட்பட, உள் அரங்க நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிய வேண்டும்,” என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:நாட்டில் கொரோனா அதிகரிக்கிறது. பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும். நம் மாநிலத்தில் தொற்று இல்லை, தொலைவிலுள்ள டில்லியில் உள்ளது என, மக்கள் அலட்சியப்படுத்தக்கூடாது.டில்லி உட்பட, வட மாநிலங்களில் தொற்று கணிசமாக அதிகரிக்கிறது. வெளி நாடுகளில் தொற்று தென்பட்டது. கர்நாடகாவில் முக கவசம் அணிவதை, கட்டாயமாக்கவில்லை.
அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் சூழ்நிலை, தற்போதைக்கு ஏற்படவில்லை.நான்காவது அலையிலிருந்து, தப்பிக்க வேண்டுமானால், அலட்சியம் செய்யாமல், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும், தடுப்பூசி பெறுகின்றனர். அதேபோல மத்திய அரசு, 5 முதல், 12 வயதுக்குட்பட்டோருக்கு, தடுப்பூசி போட தயாராகி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement