ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி, சக ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் கவண்டேவைத் திருமணம் செய்து கொண்டார்.
2016 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் டீனா டாபி. அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். டீனா டாபி தற்போது ராஜஸ்தானின் இணை நிதி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் டீனா டாபி தனது முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், ராஜஸ்தானின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகம் துறையின் இயக்குநராக பணிபுரியும் சக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பிரதீப் கவண்டேவை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் டீனா டாபி – பிரதீப் கவாண்டே இணையரின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஐஏஎஸ் அதிகாரி இணையர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதீப் கவாண்டே 2016-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
முன்னதாக டீனா டாபி , ஐஏஎஸ் அதிகாரியான அதார் அமீர் கானை கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்தத் திருமணம் ஓராண்டிலேயே முறிந்தது.
இதையும் படிக்க: பீகாரில் திடீர் திருப்பம் – எதிர்க்கட்சி அளித்த இஃப்தார் விருந்தில் பாஜக ஆதரவு முதல்வர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM