தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர் லோகேஷ் கனகராஜ். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இப்படம் லோகேஷ் கனகராஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.
இதையடுத்து விஜய்யை வைத்து
மாஸ்டர்
படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரிவர பயன்படுத்திய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தார்.
KGF நிறுவனத்துடன் கைகோர்க்கும் அந்த நடிகர்..! அப்போ சூர்யா இல்லையா ?
இந்நிலையில் தற்போது கமலின் நடிப்பில்
விக்ரம்
படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
விக்ரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவுள்ளது.
இந்நிலையில் தற்போது கமலின் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதைக்கு காபி ரைட் வாங்கியுள்ளார்.
தற்போது விக்ரம் படத்தின் ஸ்கிரிப்ட் காபி ரைட் செய்திருக்கும் சான்றிதழ் வெளியாகிவுள்ளது. தற்போது படத்தின் கதையை பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிவருவதால் அதையெல்லாம் தவிர்க்கவே லோகேஷ் விக்ரம் படத்தின் கதைக்கு காபி ரைட் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா விஜய்? குஷியாகும் ரசிகர்கள்