சாந்திகிரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை முகாம்| Dinamalar

புதுச்சேரி: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை (24 ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.

காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் ஆலோசனை முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ், ஸ்பான்டிலேசில் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், கண்ணன் சிகிச்சை அளிக்கின்றனர். அறுவை சிகிச்சை இன்றி நோய்கள் குணப்படுத்தலாம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பெற 0413-2225898, 95855-35898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.