சுவிட்சர்லாந்தில் உணவுக்காக வரிசையில் நிற்கும் உக்ரைனிய அகதிகள்



சுவிட்சர்லாந்தில் உக்ரைனிய அகதிகள் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர்.

பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து சுமார் 40,000 உக்ரைனிய மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் வருகையை சமாளிக்க சுவிட்சர்லாந்து போராடி வரும் நிலையில், நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் மத்திய சூரிச்சில் இன்று உணவுக்காக வரிசையில் நின்றனர்.

அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் சுவிஸ் அரசிடமிருந்து சில நிதி உதவிகளைப் பெறுகின்றனர், இருப்பினும் இது உலகிலேயே மிக உயர்ந்த செலவு (Cost of Living) உள்ள நாட்டில் வாழ்வதற்குப் போதுமானதாக இல்லை.

வந்தவர்களில் பாதி பேர் சுவிஸ் மக்களின் வீடுகளில் குடும்பங்களுடன் தங்கியிருகின்றனர். அவர்கள் கூட, உணவு, உடை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ஜூரிச் அறக்கட்டளையின் உணவு வங்கிக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்றதாக சுவிட்சர்லாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

உக்ரைன் போருக்கு முன்பே , சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வாழ்வதற்கு அகதிகளுக்கான நலத்திட்டங்கள் போதுமானதாக இல்லை. ஜூரிச்சில் உள்ள வாக்காளர்கள் 2017-ல் அகதிகளுக்கான நலன்புரிக் கொடுப்பனவுகளை மாதத்திற்கு சுமார் 500 சுவிஸ் பிராங்குகளாக (522 அமெரிக்க டொலர்) குறைக்க முடிவு செய்தனர், இது நிலையான சமூக நல நிலைகளை விட 30% குறைவாக உள்ளது.

சூரிச்சின் சமூக சேவைத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹெய்க் இஸ்செல்ஹார்ஸ்ட், அதிகாரிகளால் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் உள்ளன என்று கூறினார். இருப்பினும், சுவிஸ் குடும்பங்களுடன் தங்கியிருக்கும் அகதிகளுக்கு உதவுவதற்கான நடைமுறை எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

உக்ரேனிய அகதிகள் தற்காலிக குடியுரிமை மற்றும் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தாலும், சுவிஸ் குடியிருப்பாளர் வீடுகளில் குடும்பங்களுடன் தங்கியிருக்கும் அகதிகளின் தற்போதைய தேவைகளை இது சிறிதும் நிவர்த்தி செய்யாது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.