நடப்பு வாரத்தில் 6 நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக குறைந்துள்ளது. இன்றும் தங்கம் விலையானது குறைந்துள்ளது. இது சாமானியர்களுக்கு தங்கம் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இன்று சர்வதேச சந்தை விடுமுறை என்பதால், தங்கம் விலையில் அது எதிரொலிக்க வாய்ப்பில்லை. இந்திய எம்சிஎக்ஸ் சந்தையும் இன்று விடுமுறையாகும்.
இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
வரவிருக்கும் திருமண பருவம், அக்ஷய திருதியை உள்ளிட்ட காலக்கட்டங்களில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். எப்படியிருப்பினும் இன்றைய சரிவானது ஒரு நல்ல வாய்ப்பு எனலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலை இன்று சற்றே குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4945 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 39,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 5395 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 43,160 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,950 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 71.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 716 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 71,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எவ்வளவு குறைவு?
நடப்பு வாரத்தில் 6 நாட்ளில் 4 நாட்கள் விலையானது குறைந்துள்ள நிலையில், இது வரையில் தங்கம் விலையானது சவரனுக்கு 816 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு இதுவரையில் 3600 ரூபாய் குறைந்துள்ளது.
gold price on April 23rd 2022: gold prices down today; is it a right time to buy?
gold price on April 23rd 2022: gold prices down today; is it a right time to buy?/சூப்பர் சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. !