தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின.
அதனைத்தொடர்ந்து, ஆப்கனை கைபற்றியுள்ள
தலிபான்கள்
, அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன.
மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், தற்போதைய அவர்களது நடவடிக்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ரஷ்யா, உக்ரைன் செல்லும் ஐ.நா., பொது செயலாளார்!
இந்த நிலையில், இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக கூறி டிக்-டாக் மற்றும் பப்ஜி ஆகியவற்றுக்கு ஆப்கானிஸ்தனில் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ற்கனவே ஆப்கானிஸ்தானில் பொழுது போக்கு அம்சங்கள் பலவற்றிற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில், அந்த வரிசையில் டிக்-டாக் மற்றும் பப்ஜி ஆகியவை இணைந்துள்ளன.