இலங்கை மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் தென் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.
நாளைய தினத்தில் தென் தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடற்பகுதியில் ஒட்டியிருக்கக்கூடிய தென் தமிழகத்தில் கன்னியாகுமரி கடற் பகுதியில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
மகாராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி