DMK MP Kanimozhi Shock Reply For Tasmac Related Question : மாணவிகள் மத்தியில் கலந்துரையாடிய திமுக எம்பி கனிமொழியிடம் மது ஒழிப்பு குறித்து கேட்டபோது தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு குறித்து எதுவும் கூறப்படவில்லைஎன்று அவர் பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறி பல்வேறு காலக்கட்டங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பல தரப்பினரும் போராட்டங்களை முன்னேடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படாமல் உள்ள நிலையில், இவர்களி்ன் போராட்டத்திற்கு அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பி கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாணவ மாணவிகள் திறமைகளை முன்னேற்றும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ‘பங்கேற்றார். இந்த உரையாடலில் எம்பி கனிமொழியிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
அப்போது மாணவி ஒருவர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து வருகிறது. காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மதுவிற்பனை தடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய கனிமொழி எம்பி திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இதனால் மதுக்கடைகள் மூடப்படுவது என்பது இயலாதது அதற்கு பதிலாக கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் கனிமொழியின் இந்த பதிலை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்துளளனர். ஆனால் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த மாணவி காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து வரும் மதுபாட்டில்களை எடுத்து வந்து பயன்படுத்தி வருகினறனர். ஆகையால் மதுக்கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கனிமொழி. தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவல்துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் பணியில் இருக்கும்போது காவலர்கள் மது அருந்தினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த கனிமொழியிடம், தொடர் மின் வெட்டு மற்றும் மது ஒழிப்பு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.