நடிகை
குஷ்பு
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.கன்னம் ரெண்டும் நன்றாக உப்பி, பார்ப்பதற்கே ஜீராவில் ஊறிய குலாப்ஜாமுன் மாதிரி சும்மா கும்முனு இருப்பவர் குஷ்பு.
இவர் சமீபகாலமாக மிகுந்த உடற்பயிற்சி செய்து எடை குறைந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த போட்டோக்கள் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வருகின்றன.தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ரஜினி
, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார்.
அடிக்கடி ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: பகீர் கிளப்பும் நடிகர் நகுலின் மனைவி.!
1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி நடித்த
முறைமாமன்
படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டதால் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குஷ்பு தொடர்ந்த நடித்து வருகிறார்.
சுந்தர்சி
மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு
அவந்திகா
,
அனந்திதா
என்று இரண்டு டீன் ஏஜ் மகள்கள் உள்ளனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் குஷ்பு எப்போதும் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குஷ்பு கடுமையான உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட 15 கிலோ வரை குறித்து, தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஸ்மார்ட்டாக மாறினார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் ஊசியுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆச்சு என கேட்டு நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பல்லோ மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்துக்கொண்டதாகவும் மற்றொரு பதிவில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!