மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிவரும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மத்திய தொகுப்பில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் திடிரென தடைப்பட்டதால் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்திருப்பது பொது மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சனை ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது. அந்த கருத்தை பொய்யாக்கும் வகையில், மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு சீரான மின்சாரத்தை வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.