தொடரும் போர்: ரஷ்யா, உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஐநா பொதுச்செயலர்!

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரும் 26 ஆம் தேதி ரஷ்யாவிற்கு செல்ல உள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டு மாதங்களை எட்டி உள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை
ரஷ்யா
தாக்கி அழித்துள்ளது. மரியுபோலில் எஃகு ஆலையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளையும் ரஷ்யப் படை கைப்பற்றி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரும் 26 ஆம் தேதி ரஷ்யாவிற்கு செல்லவிருக்கிறார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்குச் செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேச உள்ளார். மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவையும், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்திக்க உள்ளார். இத்தகவலை, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

டிக்-டாக், பப்ஜிக்கு தடை: அடுத்த அதிரடி உத்தரவு!

இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து பேசக் கூடும் என்று தெரிகிறது. அப்போது உக்ரைன் மீதான போர் நிறுத்தும்படி, அதிபர் விளாடிமிர் புடினிடம், அன்டோனியா குட்டரெஸ் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு செல்லும் அன்டோனியோ குட்டரெஸ், அந்நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கியை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.