சரமாரியாக குண்டு மழை பொழிந்த ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன படைகள் சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் 2 நாட்களுக்கு முன் Malynivka கிராமத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இணையத்தில் வெளியான வீடியோவில், சரமாரியாக குண்டுகளை பொழிந்த வரும் ரஷ்ய ஹெலிகாப்டரை நடுவானில் திடீரென ஏவுகணை ஒன்று தாக்குகிறது.
இதில், அந்தரத்திலே வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.
Aerial shot of the Russian attack helicopter’s wreckage.#Russia #Ukraine pic.twitter.com/OFrIS6Nyce
— BlueSauron👁️ (@Blue_Sauron) April 23, 2022
MANPADS வான்-பாதுகாப்பை பயன்படுத்தி உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.