புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் நாள்தோறும் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் ரெயில்களின் நேரம், ரெயில்கள் இயங்கும் நிலை மற்றும் பயணிகள் முழு விவரம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் தொடுதிரையை ரெயில்வே நிர்வாகம் அமைக்கிறது.
நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 65 ஆயிரம் டிஜிட்டல் டிஸ்பிளே ஸ்கிரீன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திடம் இந்த மெகா திட்டத்தை நிறைவேற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரெயில் நிலையங்களில் உள்ள நடை மேம்பாலம், பிளாட்பாரங்கள், காத்திருக்கும் அறை, பரந்த அகன்ற இடைவெளி இடம் ஆகியவற்றில் இந்த டிஜிட்டல் திரை வைக்கப்படுகிறது.
ஏ1, ஏ, பி, மற்றும் சி என்ற அனைத்து வகையான ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.