புதுடில்லி: நிடி அயோக் துணைத்தலைவராக இருந்த ராஜிவ்குமார் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சுமன் கே பெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார நிபுணரான ராஜிவ்குமார் கடந்த 2017 ம் ஆண்டு நிடி அயோக் துணைத்தலைவராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் ஏப்.,30 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, ஏப்.,30 முதல் பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதித்துள்ளது.
தொடர்ந்து, புதிய துணைத்தலைவராக சுமன் கே பெரியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இவர், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, புள்ளியியல் கமிஷன் மற்றும் பணக்கொள்கை தொடர்பான ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினராகவும் உள்ளார்.
புதுடில்லி: நிடி அயோக் துணைத்தலைவராக இருந்த ராஜிவ்குமார் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சுமன் கே பெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பொருளாதார நிபுணரான ராஜிவ்குமார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.