நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட இந்தியன் செர்ரி பழ சீசன் தொடங்கியுள்ளது.
வைட்டமின் சி சத்து நிறைந்த செர்ரி பழம், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்டது. இந்த பழம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதாக கூறப்படுகிறது. கூடலூரில் ஒருசில வீட்டில் மட்டுமே இந்தியன் செர்ரி பழ மரங்கள் உள்ளன.
இந்தப் பழத்தை உள்ளூர் மக்கள் ஊறுகாய் போட பயன்படுத்துகின்றனர். இந்த பழத்தின் மருத்துவ குணத்தை அறிந்த மக்கள், தங்கள் வீடுகளிலேயே மரத்தை வளர்க்க தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய செய்தி: ’இதுநடக்காவிட்டால் 15 மணி நேர மின்வெட்டு அமலாகும்’ – எச்சரிக்கும் மின்வாரிய அதிகாரிகள்!