மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு புதிதாக சேவையைத் தொடங்கிய ரயிலில் பொதுமக்களும் வர்த்தகர்களும் உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினர்.
கோடை சீசனையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது. வியாழனன்று இரவு நெல்லையிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில், நேற்றிரவு மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லை புறப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து 75 சதவிகிதம் அளவுக்கு பயணிகள் புறப்பட்டனர்.
இந்த ரயில் சேவைக்கு மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு தெரிவித்த பொதுமக்களும் வர்த்தகர்களும் உற்சாகமாக வழியனுப்பினர். மேலும், ஜூன் இறுதி வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாரந்திர ரயிலை, தினசரி சேவையாக்கி நிரந்தரமாக்கிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க: ‘கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ – சசிகலா உறுதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM