பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!

இணையம் மந்தமாக இருக்கும் நேரத்தில், அனைவருக்கும் புதிய டிரெண்டிங் டாபிக் கொடுப்பதில் வல்லவராக வலம் வருபவர்
டெஸ்லா
நிறுவனர்
எலான் மஸ்க்
. எப்போது ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் மஸ்க், தனது பதிவுகளின் மூலம் அவ்வப்போது ஹாட் டிரெண்டாகி விடுகிறார்.

சமீபத்தில் ட்விட்டர் குறித்து சில கருத்துக்கணிப்பை ட்விட்டரிலேயே நடத்திய மஸ்க், பின்னாளில் ட்விட்டர் பங்குகளை வாங்கி, அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு சர்ச்சைக்குள்ளான எமோஜியைக் கொண்டு
மைக்ரோசாப்ட்
நிறுவனரை வம்புக்கு இழுத்துள்ளார்.

வைரலான மஸ்கின் ட்வீட்

எலான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “in case u need to lose a boner fast” என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ஒரு பக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸும், மற்றொரு புறம் ஆப்பிள் ஐஓஎஸ் எமோஜியில் உள்ள தொப்பையுடன் இருக்கும் ஆன் படத்தினையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

மஸ்கின் இந்த பதிவை அலசி ஆராய்ந்த ட்விட்டர் வாசிகள், சரியான காரணங்கள் புரியாமல் திணறி நின்றனர். எனினும் சிலர் இதுகுறித்த கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். வெளிப்படையாக, எலோன் மஸ்க்கின் ட்வீட், மைக்ரோசாப்ட் ஊழியருடன்
பில் கேட்ஸ்
நெருக்கமாக இருந்த விவகாரத்தில், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற்றதை குறிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

மஸ்க் கேட்ஸ் பனிப் போர்

ஆனால், சிலரோ மஸ்க் பில் கேட்ஸ் மீது கோபமாக இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என்று யூகித்துள்ளனர். அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம், டெஸ்லா பங்கு மதிப்பை அரை பில்லியன் மதிப்பிலானதாகக் குறைக்க முயற்சித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே மஸ்க் இப்படி செய்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பதிப்பிலான பங்குகளை வர்த்தகத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் விற்கும் போது, பங்கின் மதிப்பு குறையும். இதை டெஸ்லா பங்குகளின் மீது பில் கேட்ஸ் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக மஸ்குடன், கேட்ஸ் சாட் செய்ததாக சில ScreenShots-ம் இணையத்தில் சில தினங்களுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரீன்ஷாட்களில் எலோன் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ் இடையேயான உரையாடல் உள்ளது. ஸ்பேஸ்எக்ஸின் வெற்றிக்காக எலோன் மஸ்க்கை வாழ்த்தி பில் கேட்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தி அதில் இடம்பெற்றுள்ளது. பதிலுக்கு, டெஸ்லாவுக்கு எதிராக இன்னும் அரை பில்லியன் டாலர் பங்குகளை ஷாட் செய்ய வைத்திருக்கிறீர்களா என்று மஸ்க் கேட்ஸிடம் கேட்கிறார்.

அதற்கு கேட்ஸ், “சொல்லுவதற்கு மன்னிக்கவும், நான் இன்னும் அதிலிருந்து வெளிவரவில்லை”, என்று தெரிவித்திருந்தார். அதாவது கேட்ஸ் இன்னும் டெஸ்லாவில் கணிசமான பங்குகளை ஷாட் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளார். இது டெஸ்லாவின் பங்கு விலைகளை சீர்குலைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐஓஎஸ் எமோஜி சர்ச்சை

மார்ச் மாதத்தில் வெளியான ஐஓஎஸ் 15.4 பதிப்பில், ஆப்பிள் நிறுவனம் புதிதாக 35 எமோஜிக்களை வெளியிட்டது. இதில் ஆண் கருவுற்று இருப்பது போன்ற எமோஜி, இரு பாலினத்திற்கும் சமமான எமோஜி உள்ளிட்டவைகள் அடங்கும். இதில் ஆண் கருவுற்றிருக்கும் எமோஜி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும், இது ஆண் கருவுற்றிருக்கும் எமோஜி இல்லை என்றும், ஆண் தொப்பையுடன் இருப்பதையே இது குறிக்கிறது என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகள்:

அந்த மாதிரி படங்களை மறைக்கும் ஆப்பிள்!

டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.