காக்ஸ்டவுன் : ‘பெங்களூரில் 11 ஆயிரம் டி.பி., நோயாளிகள் இருக்கின்றனர்’ என்ற அதிர்ச்சி தகவலை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கர்நாடக சுகாதார துறை சார்பில், மாநிலம் முழுதும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக பெங்களூரு கிழக்கு மண்டலம் சார்பில், காக்ஸ்டவுன் அரசு முதல் நிலை கல்லுாரி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
பெங்களூரு மாநகராட்சி, ஆயுஷ் துறை, ஹோமியோபதி, தேசிய சுகாதார திட்டம், கர்நாடக சுகாதார துறை உட்பட பத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன.ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. சில பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் – ஆரோக்கிய கர்நாடகா சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டன.முகாமை துவக்கி வைத்த, பெங்., மத்திய தொகுதி பா.ஜ., – எம்.பி., மோகனிடம், ”பெங்களூரில் மட்டுமே 11 ஆயிரம் டி.பி., நோயாளிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டச்சத்து உணவு சாப்பிட அனைவருக்கும் அரசு தரப்பில் மாதந்தோறும் தலா 500 ரூபாய் வழங்கப்படுவதாகவும், முறையான சிகிச்சை பெற்றால் குணமடையலாம்,” என்று விளக்கினர்.அப்போது, ”பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஐசோலேசன் மருத்துவமனை பெரிதாக இருப்பதால், டி.பி., நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொள்ள வசதியாக இருக்கும்,” என எம்.பி., கூறினார்.
Advertisement