மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கோயில் திருவிழா ஒன்றில் கடந்த 17ஆம் தேதி பங்கேற்ற அவர், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அமைதியை சீர்குலைத்து, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரத்தினதாஸ் அளித்த புகாரின்பேரில், பாலசுப்பிரமணியம் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/E_JutpwswdI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
இதையடுத்து ஈத்தாமொழியில் உள்ள இல்லத்தில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டபோது, தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்திய செய்தி: “அனுமதியின்றி எப்படி வைக்கலாம்?” – கோவையில் திமுகவினர் எதிர்ப்பால் பேரூராட்சி அலுவலகத்தில் நீக்கப்பட்ட மோடி படம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
