மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.
புதுச்சேரியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா, டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆவடியில் இரவு தங்குகிறார்
பாஜகவினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், காரில் ஆவடி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வளாகத்துக்குச் செல்கிறார். அங்கு, இன்று இரவு அமித் ஷா ஓய்வு எடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து, நாளை காலை ஹெலிகாப்டரில் புறப் பட்டு புதுச்சேரி செல்கிறார். அங்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் குமரகுரு பள்ளத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டவும், கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டவும் அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை டில்லி திரும்புகிறார்
தொடர்ந்து, ரூ.30 கோடி செலவில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியைத் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் நாளை மாலை சென்னை விமானம் நிலையம் வருகிறார். பின்னர், விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.