மயிலாடுதுறையில் செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எலுமிச்சம் பழங்களின் விலை உயர்ந்து ஒரு எலுமிச்சம் பழம் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மார்க்கெட்டில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒரு வியாபாரியின் கடையில் இருந்து செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம் பழங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த வியாபாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு மீண்டும் இதே போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நleடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.