சென்னை: கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறுபாட்டை களைய மாணவர்களுக்கு சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
